ஸத்குரு ஞானானந்தா தஞ்சம் தஞ்சம்
SATHGURU GNANANANDA THANJAM THANJAM
------------------------------
விருத்தம்
----------------------------------
சொல்லாமலே சொல்லி
கேட்காமலே கொடுத்து நாம் அறியாமலே
நம்மை இயக்கி அன்புடனே துன்புறுத்தி
வாக்கிற்கும் மனதிற்கும் அறிவிற்கும்
எட்டாத தானே தானே ஆன அந்நிலையை தருபவனாம் குருநாதா
மந்தஸ்மித முகாம் போஜம் மஹனீய குணார்ணவம்
மதுராபாஷிணம் சாந்தம் ஸர்வபூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம்
ஞானானந்தம்
ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞானஸித்தயே
ஓதும் பல சாஸ்திரத்தின் உண்மை ஆராய்ந்தே
உலக ஸுகம் துச்சமென உதகறித் தள்ளி
நீதிநெறி வழுவாது நெறியினின்று
நிலையான சாயுஜ்யம் அடையும் மார்க்கம்
நல்ல போதனை செய்கின்ற மஹான் ஞானானந்தன் – அவன்
பொன்னடிகள் எந்நாளும் சிந்தையில் வைப்போம்.
முத்தரை பகைவரென்றும் மூர்க்கரை உறவரென்றும்
பித்தராய் அநேக ஜன்மம் பிறந்திறந்து
ஊழலுவோர்க்கு பக்தியால் யோகங்காட்டி
யோகத்தால் ஞானம் காட்டும்
ஸத்திய ஞானானந்த ஸத்குரு பாதம் போற்றி.
ஸத்குரு ஞானானந்தா தஞ்சம் தஞ்சம்
சரணார விந்தமே தமியேனுக்காதாரம் (ஸத்குரு)
சித்தாகி ஸத்தாகி சிவமாகி நின்றவனே
அத்தனே அண்ணலே ஆதியே ஜோதியே (ஸத்குரு)
கந்தனைக் கண்ணணைக் கைலாய நாதனை
கௌரியை கணபதியை நான் கண்டதில்லை
தெய்வமெல்லாம் எனக்கு தேவா நீ ஒருவனே
தேவாதி தேவா ஹரிதாஸனைக் காவாவா (ஸத்குரு)
No comments:
Post a Comment