Thursday, June 12, 2025

சிவன் பாமாலை - வானனை, மதி சூடிய - Vaananai Mathi Soodiya

வானனைமதி சூடிய - Vaananai Mathi Soodiya

ஐந்தாம் : திருமுறை 

அ௫ளியவர் :  திருநாவுக்கரசர்

பண் : திருக்குறுந்தொகை

நாடு : நடுநாடு தலம் :  அண்ணாமலை

--------------

வானனைமதி சூடிய மைந்தனை,

தேனனைதிரு அண்ணாமலையனை,

ஏனனைஇகழ்ந்தார் புரம்மூன்று எய்த

ஆனனை, அடியேன் மறந்து உய்வனோ?

 

வீரனைவிடம் உண்டனைவிண்ணவர

தீரனைதிரு அண்ணாமலையனை

ஊரனைஉணரார் புரம் மூன்று எய்த 

ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ?

 

வட்டனை(ம்)மதிசூடியைவானவர்- 

சட்டனைதிரு அண்ணாமலையனை

இட்டனைஇகழ்ந்தார் புரம்மூன்றையும் 

அட்டனை, அடியேன் மறந்து உய்வனோ?

 

மத்தனை(ம்)மதயானை உரித்த எம் 

சித்தனைதிரு அண்ணாமலையனை

முத்தனை(ம்)முனிந்தார் புரம்மூன்று எய்த

அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?

 

 காற்றனைகலக்கும் வினை போய் அறத் 

தேற்றனைதிரு அண்ணாமலையனை

கூற்றனைகொடியார் புரம்மூன்று எய்த 

ஆற்றனை, அடியேன் மறந்து உய்வனோ?

 

மின்னனைவினை தீர்த்து எனை ஆட்கொண்ட 

தென்னனைதிரு அண்ணாமலையனை

என்னனைஇகழ்ந்தார் புரம்மூன்று எய்த 

அன்னனை, அடியேன் மறந்து உய்வனோ?

 

மன்றனை(ம்)மதியாதவன் வேள்விமேல் 

சென்றனைதிரு அண்ணாமலையனை

வென்றனைவெகுண்டார் புரம்மூன்றையும் 

கொன்றனைகொடியேன் மறந்து உய்வனோ?

 

கருவினைகடல்வாய் விடம் உண்ட எம் 

திருவினைதிரு அண்ணாமலையனை

உருவினைஉணரார் புரம் மூன்று எய்த 

அருவினை, அடியேன் மறந்து உய்வனோ?

 

அருத்தனைஅரவு ஐந்தலை நாகத்தைத் 

திருத்தனைதிரு அண்ணாமலையனை

கருத்தனைகடியார் புரம்மூன்று எய்த 

வருத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?

 

அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய 

திருத்தனைதிரு அண்ணாமலையனை

இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத் 

துரக்கனை, தொண்டனேன் மறந்து உய்வனோ?


No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...