Monday, July 14, 2025

குரு வந்தனம் - குரு க்ருபை இல்லாமல் - Guru Krupai Illamal

குரு க்ருபை இல்லாமல் - Guru Krupai Illamal

------------------

நாம் அறியாமலே நம்மை இயக்கி
அன்புடனே துன்புறுத்தி
வாக்கிற்கும் மனதிற்கும் அறிவிற்கும் எட்டாத
தானே தானே ஆன அந்நிலையை
தானே தருபவராம் குருநாதர்

 ------------------

ராகம் : தேஷ்
------------------

குரு க்ருபை இல்லாமல் ஹரி க்ருபை இல்லை
ஹரி க்ருபை இல்லாமல் பக்தியும் இல்லை
 
பக்தியில்லாமல் முக்தியும் இல்லை
முக்தியில்லாமல் துக்க நிவ்ருத்தியும் இல்லை ||
 
குருவுருவும் ஹரிவுருவும் ஓருருவாகுமே
ஓருருவில் உன் மனதை நிறுத்தினால்
ஓருருவான அந்த ஓங்காரப்பொருள்
ஸத்ய ஞான அனந்த ப்ரஹ்மமாய் மிளிர்ந்திடுமே ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...