Sunday, April 26, 2026

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL
அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்
----------------------
இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின்
ராகம் : பைரவி
----------------------
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன் 
----------------------------
பல்லவி:
அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்
அஞ்சுவோர்க்கு அபயம் அளிக்கும் சரவணன் இருக்க (அஞ்சேல்)

அனுபல்லவி:
வஞ்சக் கயவர், வல்வினைப் பிணியும்
சஞ்சல நெஞ்சமும் சற்றும் அஞ்சேல் (அஞ்சேல்)

சரணம்:
அஞ்சேல் என்று நீ அருளுடன் தந்த
வேல் அவனியில் என்தனை காக்கும் வேல்

Friday, April 10, 2026

குரு வந்தனம் - மஹா பெரியவா - காஞ்சி வாழ் தவமுனிவா - KANCHI VAZH THAVA MUNIVAA

காஞ்சி வாழ் தவமுனிவா
KANCHI VAZH THAVA MUNIVAA
--------------
காஞ்சி வாழ் தவமுனிவா!
கருணை உள்ளம் கொண்டவா...
கால பயம் நீக்கிடவே
கலியுகம் தனில் வந்தவா...

முற்றும் துறந்த மூர்த்தியாக
முற்றும் உணர்ந்த ரூபனே
காலடியில் வந்துதித்த
சிவன் காலடி வழி வந்தவா...

Wednesday, April 1, 2026

கண்ணன் பாமாலை - ராதா ரசிகவர ராஸ விஹாரா - RADHA RASIGA VARA RAASA VILASA

ராதா ரசிகவர ராஸ விஹாரா
RADHA RASIGA VARA RAASA VILASA
--------------------
ராதா ரசிகவர ராஸ விஹாரா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

ராஸ விலோல ரம்ய ஸுகேலா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

மோஹன முரளி கான விலோலா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

முகுந்த மாதவ ஹே கனஷ்யாமா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

ராதா ரசிகவர ராஸ விஹாரா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

ராஸ விலோல ரம்ய ஸுகேலா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

முகுந்த மாதவ ஹே கனஷ்யாமா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

மோஹன முரளி கான விலோலா
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண
ராதாகிருஷ்ண ராதாகிருஷ்ண...

கண்ணன் பாமாலை - மாதவ மாமவ தேவா க்ருஷ்ணா - MATHAVA MAAMAVA DEVA KRISHNA

மாதவ மாமவ தேவா க்ருஷ்ணா
MATHAVA MAAMAVA DEVA KRISHNA
-----------------
மாதவ மாமவ தேவா க்ருஷ்ணா
யாதவ க்ருஷ்ணா
யதுகுல க்ருஷ்ணா (மாதவ)

அனுபல்லவி:
ஸாது ஜனாதார, ஸர்வபௌம (மாதவ)

சரணம்:
அம்புஜலோசன, கம்பு ஸுபக்ரீவ,
பிம்பாதர சந்த்ர, பிம்பானன
சாம்பேய நாஸாக்ர, லக்ன ஸுமௌக்திக
ஶாரத சந்த்ரஜனித மதன (மாதவ)

கபடமானுஷ தேஹ கல்பித
ஜகதண்ட கோடி மோஹித பாரதீரமண
அபகத மோஹத உத்பவ நிஜஜன
கருணாத்ருத தேஹ ஸுலக்ஷண

இந்திர யாஸஹ, ஸுந்தர க்ருஷ்ண
புரந்தராதி வந்த்ய, பதகமல
நந்த நந்தன யோகி, வர்ய துரந்தர
நாராயண தீர்த்த, மதி விஹார (மாதவ)

கண்ணன் பாமாலை - வ்ரஜ கோப கோபி ரமணா - VRAJA GOPA GOPI RAMANA

வ்ரஜ கோப கோபி ரமணா
VRAJA GOPA GOPI RAMANA

வ்ரஜ கோப கோபி ரமணா
க்ருஷ்ண சந்த்ர ஜய ராதா ரமணா

ஸுகந்த கஸ்தூரி திலகா
அதிஸுகந்த கஸ்தூரி திலகா
மதுர முரளிதர நாத யதுநாத
வைஜயந்தி வனமாலிகாபரண

வ்ரஜ கோப கோபி ரமணா
க்ருஷ்ண சந்த்ர ஜய ராதா ரமணா

ராதா ரமணா
ராதா ரமணா
ராதா ரமணா

வ்ரஜ கோப கோபி ரமணா
க்ருஷ்ண சந்த்ர ஜய ராதா ரமணா

முருகர் பாமாலை - பால் காவடி கொண்டு பழனி மலை வரும் நேரமே - PAAL KAAVADI KONDU PAZHANI MALAI VARUM NERAME

பால் காவடி பன்னீர் காவடி வரும் நேரமே
PAAL KAAVADI PANEER KAVDI VARUM NERAME
------------------------
பால் காவடி பன்னீர் காவடி வரும் நேரமே
அரோகரா அரோகரா ஆரவாரமே

ஆவலுடன் ஆவினன்குடி வரும் நேரமே - அங்கே
அரோகரா அரோகரா ஆரவாரமே

கந்தசுவாமி கதிர்காமம் வரும் நேரமே - அங்கே
அரோகரா அரோகரா ஆரவாரமே!

தணிகாசலம் திருதணிகை வரும் நேரமே  - அங்கே
அரோகரா அரோகரா ஆரவாரமே!

சுவாமிநாதன் சுவாமி மலை வரும் நேரமே - அங்கே
அரோகரா அரோகரா ஆரவாரமே!

செந்தில்நாதன் திருச்செந்தூர் வரும் நேரமே - அங்கே
அரோகரா அரோகரா ஆரவாரமே!
---------
வேலா வடிவேலா வெற்றி வேலா வீர வேலா
பாலா சிவபாலா - சிவபாலா வள்ளி லோலா
நாதா குருநாதா - குருநாதா ஸ்வாமிநாதா
வேலா வடிவேலா வெற்றி வேலா வீர வேலா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா

Friday, March 20, 2026

சிவன் பாமாலை - தென்னாடுடைய சிவனே போற்றி - Thennadudaiya Sivane Potri

 தென்னாடுடைய சிவனே போற்றி

Thennadudaiya Sivane Potri

-------------------------------

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

 

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி

 

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க

அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி...

Thursday, March 19, 2026

அபங்கம் - துமசேம் நாமஸங்கீர்த்தன THUMACHEM NAMA SANKEERTHANA

துமசேம் நாமஸங்கீர்த்தன
THUMACHEM NAMA SANKEERTHANA
------------------
ச்லோகம்
ஸக்ருத் ஸ்மரண மாத்ரேண
ஸர்வ மங்கள தாயகம்
ஜகதுத்தாரகம் வந்தே
ஹ்ரிரிதி அக்ஷரத்வயம்
 
அபங்கம்
துமசேம் நாமஸங்கீர்த்தன
ஹேசி மாஜா ஸந்த்யாஸ்னான (துமசேம்)
 
துமசே பாயாஞ்சே வந்தன
ஹேம்சி மாஜேம் அனுஷ்டான (துமசேம்)
 
துமசேம் பாயாம்வா ஸாக்ஷேப
ஹேசி மாஜா காலக்ஷேப (துமசேம்)
 
துமசேம் பாயாம்பாசீம் நித்ரா
ஹேம்சி மாஜீ ப்ரேமமுத்ரா (துமசேம்)
 
ஏகா ஜனார்த்தனாகார
ப்ரும்மரூப ஹா ஸம்ஸார (துமசேம்)
 -----------------
நாமாவளி
விட்டல விட்டல ராம கிருஷ்ணஹரி
விட்டல விட்டல பாண்டுரங்க ஹரி..
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி..
துமசேம் நாமஸங்கீர்த்த ஹரி

Tuesday, March 3, 2026

ராமர் பாமாலை - சக்கனி ராஜ - CHAKKANI RAJA

சக்கனி ராஜ - CHAKKANI RAJA
---------
தியாகராஜ வைபவம்
ராகம் : கரஹரப்ரிய
---------
பல்லவி
சக்கனி ராஜ மார்க்கமுலுண்டக,
சந்துல தூரானேல? ஓ மனசா!
அனுபல்லவி
சிக்கனி பாலு மீகடா யுண்டக,
சேயுனு கங்கா சாகர மேல? ஓ மனசா! (
சக்கனி)
சரணம்
காமெதி மத மச்சராதி பஞ்ச கலுஷமுல,
காணுகி சேயுனு கங்கா சாகர மேல?
ராமாநுஜுடு செப்பின ராஜ மார்க்கமுலுண்டக,
தியாகராஜ நுதுடு ஸ்ரீ ராமசந்திருடு,
சக்கனி ராஜ மார்க்கமுலுண்டக... 
(சக்கனி)

Monday, March 2, 2026

குரு வந்தனம் - சிந்தய ரே ஸத்குரும் - CHINTHAYARE SATHGURU

சிந்தய ரே ஸத்குரும் - CHINTHAYARE SATHGURU
-----------------

ஶ்லோகம்:
யஸ்யாங்கம் கனகாப காம ஸத்ருஶம் பாலம் த்ரிபுண்ட்ராங்கிதம்
வாணீ ஸ்ரீரகுநாத நாமஸுதயாபி ஆர்த்ரா அஸக்ருத் தாரயா|
சேதஸி அம்புஜலோசன: யதுபதி: கேலதி அலம் ராதயா
தம் வை வேங்கடராம தேஶிகவரம் ஸர்வாத்மநாஹம் பஜே ||
 
பல்லவி
சிந்தய ரே ஸத்குரும் ஸந்ததம் (சிந்தய ரே)
 
அனுபல்லவி:
காம ஸத்ருஶ கனகாப ஶரீரம்
காமமோகமத கண்டன தீரம்
 
சரணம்:
ரமநாமவிலஸந் முககமலம்
ராமசந்த்ரமிவ விஶ்ருதமமலம்
கந்தரஶோபித வரமணி மாலம்
கஞ்ஜத்ருஶம் பஸ்மாங்கித பாலம் (சிந்தயரே)
 
உத்தமாங்கத்ருத ஹாடக சேலம்
உத்தம பக்தானாம் அனுகூலம்
வாம கராங்குனி வ்ரத ஜபஸுத்ரம்
வாம பாஹு வித்ருத அக்ஷய பாத்ரம் (சிந்தயரே)
 
பாதலஸித மணி பாதுகாத்வயம்
பாதரஜ: கண பர்ஜிதாமயம்
நரவர முனிகண ஸாதுஸமேதம்
நரஹரி தாஸனுதம் பவபோதம் (சிந்தயரே)
 
நாமாவளி:

அருள் பெருகிடுமே இருள் விலகிடுமே
குரு பாதுகை ஆகிடும் நம் துணையே
 
ஸத்குரோ பாஹிமாம்
பரம தயாளோ ரக்ஷமாம்
 
ஸத்குரோ ஸத்குரோ
ஸத்குரோ பாஹிமாம்
 
ஸத்குரோ பாஹிமாம்
பரம தயாளோ ரக்ஷமாம்

Thursday, February 26, 2026

ராமர் பாமாலை - கல்யாண ராம ரகு ராம ராமா - KALYANA RAMA RAGU RAMA RAMA

கல்யாண ராம ரகு ராம ராமா

KALYANA RAMA RAGU RAMA RAMA

--------------

இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட கவி

ராகம் : ஹம்சநாதம்

--------------

பல்லவி
கல்யாண ராம ரகு ராம ராமா
கனக மகுட மரகத மணி லோல ஹார தசரத பால சீதா (கல்யாண)

அனுபல்லவி
மல்லிகாதி ஸுகந்த மய நவ மாலிகாதி ஸோபித களேந
உல்லாச பரிசீலன சாமர உபய பார்ச்வேந குண்டல கேலந 
 (கல்யாண)

சரணம்
ஆகத ஸுரவர முநிகந சஜ்ஜந அகநித ஜநகந கோஷித
ராகவா ரகு ராம ராம ஜனகஜா ரமண மநோஹர ஸீதா
 (கல்யாண)

Wednesday, February 11, 2026

தத்துவ சினிமா பாடல்கள்- கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் Kannai Nambathey Unnai Ematrum

கண்ணை நம்பாதேஉன்னை ஏமாற்றும்
Kannai Nambathey Unnai Ematrum
------------------------

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)

-----------------------

பாடல் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
படம் : நினைத்ததை முடிப்பவன் – 1975
வரிகள் : மருதகாசி
பாடியவர் : T.M.சௌந்தர்ராஜன்
இசை : M.S.விஸ்வநாதன்

தத்துவ சினிமா பாடல்கள் - சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா - Sathiyame Latchiyamaai Kollada..

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
Sathiyame Latchiyamaai Kollada..
----------------
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

குள்ளநரிக் கூட்டம் ஒன்று குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
இடரவைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
---------------
பாடல் : சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
திரைப்படம் : நீலமலைத் திருடன்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர் : ஏ.மருதகாசி
இசை : கே.வி.மஹாதேவன்
ஆண்டு : 1957
நடிப்பு : ரஞ்சன், அஞ்சலிதேவி, ஈ.வி.சரோஜா

Wednesday, January 7, 2026

ராமர் பாமாலை - ஜானகீரமண கல்யாண குண - JANAKI RAMANA KALYANA GUNA

ஜானகீரமண கல்யாண குண
JANAKI RAMANA KALYANA GUNA
------------------
ராகம் : ஸாரமதி
இயற்றியவர் : பத்ராச்சல ராமதாஸர்
------------------
பல்லவி
ஜானகீரமண கல்யாண குண
ஸஜ்ஜனாவன நிபுண (ஜானகி)
 
சரணம்
எந்து ஜுசின நீவு  எந்து ஜுசின நீவு 
அந்தமுகான வத்ஸு கல்யாணராம (ஜானகி)
 
ஓநமாலு ராயகனே ஓநமாலு ராயகனே
நீ நாமமே தலது கல்யாணராம (ஜானகி)
 
ஸத்ய ஸ்வரூபமைன ஸத்ய ஸ்வரூபமைன
ப்ரத்யக்ஷமே கானி கல்யாணராம (ஜானகி)
 
எந்த ஸம்ஸாரமைன எந்தோ ஸம்ஸாரமைன
ஸந்தகூடமே கானி கல்யாணராம (ஜானகி)
 
பத்ராசல நிவாஸ பத்ராசல நிவாஸ
பாலித ராமதாஸ ராம (ஜானகி)
 --------------------
நாமாவளி
--------------------
பாஹி ராம பட்டாபிராம
பட்டாபிராம அயோத்தியராம
அயோத்தியராம தசரதராம
தசரத ராம கௌசல்யராம
கௌசல்ய ராம கௌஷிகராம
கௌஷிகராம கல்யாணராம
கல்யாணராம ஆனந்தராம
சீதாராம் ராஜாராம்
சீதாராம் ராஜாராம்

Tuesday, January 6, 2026

குரு வந்தனம் - ஸ்ரீதர வேங்கடேசம் – SRIDHARA VENKATESAM

ஸ்ரீதர வேங்கடேசம்
SRIDHARA VENKATESAM
-----------------------
ராகம் : சங்கராபரணம்
இயற்றியவர் : ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள்
-----------------------
பல்லவி

ஸ்ரீதர வேங்கடேசம் ஸ்மராம்யஹம்    (ஸ்ரீதர)

அனுபல்லவி
ஸாதுஜன ஹிதோபதேசகம் ஸத்தேசிகம்    (ஸ்ரீதர)

சரணம்
வரபஸ்மாங்கித காத்ரம் ஹரநாம ஜபஸூத்ரம்
ஹரவினிஹித நேத்ரம் ஹரக்ருபாரஸ பாத்ரம்   (ஸ்ரீதர)

கலிதநாம ஸித்தாந்தம் தளித துரிதத்வாந்தம்
ஜ்வலதாதித்யவத் பாந்தம் பலித விக்ஞான ஸ்வாந்தம் (ஸ்ரீதர)
 
சிவ சிந்தன விலோலம் சிவகதோததி கேலம்
சிவ ராமா ச்ரமீபாலம் சிவ கைவல்யானு கூலம் (ஸ்ரீதர)

குரு வந்தனம் - அதடே பரப்ரஹ்மம் - ATHATE PARABRAHMAM

அதடே பரப்ரஹ்மம்
ATHATE PARABRAHMAM
---------------------------
ராகம் : தன்யாஸி
இயற்றியவர் : ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள்
 ---------------------------

பல்லவி

அதடே பரப்ரஹ்மம்பநி மதிலோ
அநுதினமுநு கநுடி (அதடே)

அநுபல்லவி
அதிப்ரீதிகா மதனாந்தக  புரமுன
ஸ்திதுடை நெலகொநி  பதிதுல ப்ரோசிந  (அதடே)

சரணம்
ராமக்ருஷ்ண சிவநாமமு ஜேயுசு ரஜ்ஜில்லக புவினி
பாமருலகு ஸத்பதமுனு ஜுபுசு பாகுக க்ருப பூனி 
ப்ரேம மீர நிஜதாஸ தீனுலகு
காமித பலமுநு கனமுக நொஸகிந  (அதடே)
 
தாரக மந்த்ரம் பெருகனி நருலகு தாபம் பணகிஞ்சி
கோரமைந பவவாரிதி தாடக கோவிந்துனி கனிபிஞ்சி
ஸ்ரீராமுனி நாமாம்ருத பானமு
ஜேயுசு தாஸுல பவமெடலிஞ்சிந  (அதடே)
 
வேங்கடராம தேசிகவருலை விச்வம்புன வெலஸி 
பொங்கமுகா ஸ்ரீஹரிபத முலகநி  பூலபூஜ ஜேஸி
சங்க தீர்ச்சி ஸ்ரீபால கணேசுநி 
ஸங்கட முலு தொலகிம்பக ஜேஸின  (அதடே)

Monday, January 5, 2026

கண்ணன் பாமாலை - நீனே அனாதபந்து – NEENE ANATHA BANTHU

நீனே அனாதபந்து
NEENE ANATHA BANTHU
----------------------
ராகம் : நாதநாமக்ரியா
இயற்றியவர் : புரந்தரதாசர்
-----------------------
நீனே அனாதபந்து கருணா ஸிந்து
 
சரணம்
மதகஜ வெல்ல கூடிதரேனு
அதர ஸமயக்கெ ஓதகலில்ல
மன்மதனய்யா மதுஸுதன னெந்தரெ
முததிந்த பந்து ஓதகித ஸ்ரீகிருஷ்ண (நீனே)
 
பதிகளு ஐவரு இத்தரேனு
ஸதிய ஸமயக்கெ ஓதகலில்லா
கதிநீனே ஸ்ரீக்ருஷ்ணா யெந்தரே
அதிபேகதி பந்து ஓதகித ஸ்ரீக்ருஷ்ண (நீனே)
 
சிலய ரக்ஷஸி குலேக தந்தீ
பலிய கொலிது ஸத்பத வனித்து
நம்பித பகுதர ஸலஹுவ தேவா
செலுவ புரந்தர விட்டல ஸ்ரீகிருஷ்ண (நீனே)

Sunday, January 4, 2026

நாராயணன் பாமாலை - ரங்கபுர விஹாரா - RANGAPURA VIHARA

ரங்கபு  விஹாரா
RANGAPURA VIHARA
------------------
ராகம் : பிருந்தாவன  சாரங்க
இயற்றியவர்  : முத்துஸ்வமீ தீட்சிதர்
------------------

ரங்கபு  விஹாரா  ஜெய
கோதண்டரமாவதார  குவிர ஸ்ரீ
அன்கஜ  ஜனக  தேவா பிருந்தாவன
சாரங்கேந்திரா  வரத  ராமன்தரங்க
ஷ்யாமாலாங்க ரவிரங்க  துரங்க
சதயாபாங்க சத்சங்க ||

 

பங்கஜாப்தகுல  ஜலநிதி  சோமா வர
பங்கஜ முக  பட்டாபீரமா
பதபங்கஜ ஜிதகாமா  ரக்ஹுராமா
வாமாங்க  கத சீதாவர  வேஷ
சேஷாங்க   சயன  பக்த  சந்தோஷ
ஏனாங்கரவி  நயன  ம்ருதுதரபாஷ
அகலங்க  தர்பன   கபோல  விஷேச
முநிஷங்கட  ஹரன  கோவிந்த
வேங்கட  ரமண  முகுந்தா
ஷங்கர்க்ஷன  மூல கந்த
சங்கர குருகுகாணந்த ||

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...