Monday, July 14, 2025

குரு வந்தனம் - உலகத்தில் ஒருவரையும் நம்பாதே – Ulagathil Oruvaraiyum Nambathey

 
உலகத்தில் ஒருவரையும் நம்பாதே – Ulagathil Oruvaraiyum Nambathey
-------------------
உலகத்தில் ஒருவரையும் நம்பாதே
குருநாதரைத் தவிர
உன்னையே நம்பி வந்தேன் குருதேவா
 
காண்கின்ற காட்சியெல்லாம்
நடக்கின்ற நிகழ்ச்சியெல்லாம்
இதனையே சரி என்று சொல்கிறதே
 
பாபம் என்று உதவி செய்தால்
பரிகாசம் செய்கின்றார்
உதவி யென்று போய் நின்றால்
ஏற்றமும் செய்கின்றார்
 
உறவு என்று யாருமில்லை
உற்றார் என்று சத்தமும் இல்லை
மனிதரிலே பணமில்லை
குணமில்லை ஆதனினாலே
 
என் பொருளை தன் பொருள் என்பார்
தன் பொருளை மறைத்திடுவார்
கண்ணில் பார் கண்மணி என்பார்
ஒரு கணத்தினிலே ஓடிடுவார்
 
திட்டவும் முடியவில்லை
தப்பி ஓட வழியில்லை
விட்டிடவும் மனமில்லை
உன்னையன்றி யாருமில்லை

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...