Monday, July 14, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - காமாக்ஷி மடியினிலே கண்மூடி – Kamakshi Madiyinile Kanmoodi

 
காமாக்ஷி மடியினிலே கண்மூடி – Kamakshi Madiyinile Kanmoodi
--------------------
காமாக்ஷி மடியினிலே கண்மூடி உறங்கிடுவாய்
கண்ணான சேகரனே தாலேலோ
கலியாவும் தீர்த்து நல்ல வழி காட்டும் நாயகனே
கனிவாக கண்ணுறங்கு தாலேலோ
 
பல காலம் யாத்திரையாய் பாரதத்தை அளந்தவனே
பாதமலர் ஓய்வெடுப்பாய் தாலேலோ
உலகாளும் நாயகனின் உடலாளும் நாயகியாம்
உமையாளின் மடியுறங்கு தாலேலோ
 
உன்னை நாளும் காண வரும் உயிரான பக்தர்களை
குறை நீக்கி விழிஉறங்கு தாலேலோ
உலகாதி சங்கரனின் உயர்வான சந்ததியே
உன்னை நாங்கள் போற்றுகிறோம் தாலேலோ
 
நதியாக ஓடிவந்த நாயகனே சேகரனே
நன்றாக ஓய்வெடுப்பாய் தாலேலோ
தலம் யாவும் நீ வணங்கி உலகோரை காத்திடவே
அடியார்கள் வேண்டுகின்றோம் தாலேலோ

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...