Monday, December 15, 2025

முருகர் பாமாலை - பச்சை மயில் வாகனனே – PACHAI MAYIL VAGANANE

பச்சை மயில் வாகனனே – PACHAI MAYIL VAGANANE

 ----------------------

பச்சை மயில் வாகனனே - சிவ
பாலசுப்ரமண்யனே வா முருகா - என்
இச்சையெல்லாம் உன்  மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே
 
கொச்சை மொழியானாலும் - உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - எங்கும்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா
 
வெள்ளம் அது பள்ளம்தனிலே பாயும்
தண்ணிபோல் உள்ளம்தானிலே நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் எங்கள்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
 
நெஞ்சமதில்  கோவிலமைத்து அதில்
நேர்மையெனும் தீபம் வைத்து நீ
செஞ்சிலம்பு கொஞ்சிட வா முருகா
சேவல் கொடி மயில் வீரா
 
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலை தரும் தேவா நீ
ஏறுமயில் ஏறி வருவாய் முருகா
எங்கும் நிறைந்தவனே
 
அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான ஷண்முகனே முருகா நீ
அலையா மனம் தந்தாய் உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம் (பச்சை)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...