Wednesday, November 26, 2025

சிவன் பாமாலை - ஆவலாய் ஈசனை காணவேண்டி - Aavalaai Esanai Kaanavendi

 ஆவலாய் ஈசனை காணவேண்டி
Aavalaai Esanai Kaanavendi
----------------------------

ஆவலாய் ஈசனை காணவேண்டி

ஆலயம் சென்றேனே - மனமே

தேவ தேவ மகானு பாவன்

திருவுரு கண்டிலனே  -  (ஆவலாய்)

 

கோவிலுள் மூலஸ்தானம் கண்டேன்

கோபுரங்களைக் கண்டேன் மனமே

பூவின் மணம்போல் மேவிய ஈசனை

புலப்பட கண்டிலனே மனமே  -  (ஆவலாய்)

 

ஆகம் பாடசாலை கண்டேன்

யாக சாலை கண்டேன் - மனமே

ஏகமாய் விளங்கும் யோகமூர்த்தியை

ஏழையான் கண்டிலனே -  (ஆவலாய்)

 

தெப்ப குளம் ப்ரம்மதீர்த்தம் கண்டேன்

தேரோடும் வீதி கண்டேன் – மனமே

எப்பொருள்களிலும் நிறைந்த ஈசனை

இன்னும் யான் கண்டிலனே  -  (ஆவலாய்)

 

உள்ளக் கோவிலின் உள்ளே ஈசன்

உறைவதை உணர்வாயே – மனமே

உள்ளத்தில் காண்பாய் ஆனால் – கோவில்

உள்ளேயும் காண்பாயே – மனமே  -  (ஆவலாய்)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...