Thursday, November 27, 2025

சிவன் பாமாலை - அனித்ய தேகம் அதிலென்ன மோகம் - Anithya Degam Athilenna Moham

 அனித்ய தேகம் அதிலென்ன மோகம்
Anithya Degam Athilenna Moham
-----------------
ராகம் : சிந்து பைரவி
-----------------
அனித்ய தேகம் அதிலென்ன மோகம்
செனித்ததை சொல்ல வென்றால் ஞானதங்கமே
தேகமனேகமடி ஞானதங்கமே
 
தரையில் விழுந்ததுவும் தவழ்ந்து நடந்ததுவும்
தெருவில் புரண்டதுவும் ஞானதங்கமே
தூலப் பெருமையினால் ஞானதங்கமே
 
கோவணங்கள் கட்டினதும் குண்டு விளையாடினதும்
தீவினங்கள் பாடினதும் ஞானதங்கமே
தேகப் பெருமையினால் ஞானதங்கமே
 
சாகுபடி கோட்டையிலே சந்தைக்காரன் பேட்டையிலே
ஏகஜன கூட்டமடி ஞானதங்கமே
எமன் வந்தால் ஓட்டமடி ஞானதங்கமே
 
ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும்
ஓடுவதும் தேடுவதும் ஞானதங்கமே
ஒரு ஜாண் வயிற்றுக்கடி ஞானதங்கமே
 
தோட்டச் சுரக்காய் குழம்பிடக் கூடும்
ஏட்டு சுரைக்காயெல்லாம் ஞானதங்கமே
ஏதுக்குதவுமடி ஞானதங்கமே
 
ஆடை நமக்கிரவல் அணிந்த தெல்லாமிரவல்
பாடையு மிரவலடி ஞானதங்கமே
வெட்டியானை சேருமடி ஞானதங்கமே
 
செத்த பிணத்தை சீராயலங்கரித்து
சாகும் பிணங்களெல்லாம் ஞானதங்கமே
சாய்ந்து அழுகுதடி ஞானதங்கமே
ஏரியிலேநீர் இருந்தால் நீர்பறவை மெத்தவுண்டு
ஏரியிலே நீரொழிந்தால் ஞானதங்கமே
ஏதொன்றும் நில்லாதடி ஞானதங்கமே
 
பெற்றோர் பவித்திரமும் பெண்டிர் சகோதரரும்
உற்றார் உறவினரும் ஞானதங்கமே
ஓட்டம் பிடிப்பாரடி ஞானதங்கமே
 
தவத்துக் கொருவனடி தமிழுக்கிருவனடி
சவத்துக்கு நால்வரடி ஞானதங்கமே
ஜகத்தினில் வழக்கமடி ஞானதங்கமே
 
எந்த ஊர்தனிலிருந்து இந்த ஊர்தனக்கு வந்தோம்
வந்த ஊரே சொந்த ஊரு ஞானதங்கமே
வாடிக்கையா மிந்த ஊரு ஞானதங்கமே
 
ஆட்டிவைக்கும் ஐய்யன் செயல் யாரறிய வல்லவர்கள்
சாட்டையில்லா பம்பரம் போல் ஞானதங்கமே
ஜெகமெங்குமாடுதடி ஞானதங்கமே

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...