Thursday, November 27, 2025

சிவன் பாமாலை - தேவா சரணடைந்தேன் காக்க வாவா - Deva Chanadaithen Kaaka Vaa

தேவா சரணடைந்தேன் காக்க வாவா
Deva Chanadaithen Kaaka Vaa
-----------------------
ராகம் : ஸாவேரி
---------------

தேவா சரணடைந்தேன் காக்க வாவா
தேவா சரணடைந்தேன் காக்க வாவா
கருணாசாகர மூர்த்தே தேவா (சரண)
 
மெய்ப் பொருளைக் காண கைப்பொருள் இழக்க
கதியொன்றும் கண்டிலேனே (தேவா)
 
ஆழியில் விழாமல் காலன் கை கிட்டாமல்
காத்திடுவாயே தேவா தேவா (தேவா)
 
தாஸானுதாஸன் ராமதாஸர்க்கடியேன்
தாயற்றக் குழவியாய் தவிக்கவுமாகுமோ
நிர்மலாநந்தரூபா நித்ய சுகம் தந்திட
நீயே கதியே தேவா (தேவா)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...