Saturday, November 22, 2025

நாராயணன் பாமாலை - ஓம் நமோ நாராயணா என்று - OM NAMO NARAYANA ENDRU

ஓம் நமோ நாராயணா என்று
OM NAMO NARAYANA ENDRU
--------------------
இயற்றியவர் : அம்புஜம் கிருஷ்ணா
ராகம் : கர்ணரஞ்சனி
--------------------

ஓம் நமோ நாராயணா - என்று
உள்ளம் உருக உரைத்திடேன் நாவே (ஓம்)

அனுபல்லவி
க்ஷேமம் நல்கும் ஸ்ரீ குருவாயூரப்பண்
நாமமல்லால் உய்வழி வேறேது (ஓம்)
 
சரணம்
பண்ணிசைக்கும் பவழ வாயிதழும் பங்கஜ
கண்ணழகும் குண்டலந்திகழ் செவியும்
வெண்சங்கம் திகிரியொளிர் கரங்களும்
தண் துளபம் தவழ் மார்பில் மின்றும் முப்பிரிநூலும்
கிண்கிணி இடையார்ப்ப
கழல் சிலம்பு கலகலக்க
மண்ணிடை வைகுண்டத்
தப்பன் தரும் காக்ஷிதனை
கண்டதொடு களிப்போடு
பண்பாடிக் கொண்டாடி
கரங் குவித்து மெய்யுருகி
எண்திசையும் எதிரொலிக்க (ஓம்)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...