வருகலாமோ ஐய்யா - Varugalaamo Ayya----------------இயாற்றியவர் : ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாரதிராகம் -
மாஞ்சி----------------
பல்லவி
வருகலாமோ ஐய்யா - நான் உந்தன்
அருகில்
நின்று
கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ
அனுபல்லவி
பரமகிருபாநிதி
அல்லவோ - நீ
இந்த நந்தன்
உபசாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த
தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)
சரணம்
பூமியில்
புலையனாய் பிறந்தேனே - நான்
ஒரு புண்ணீயம்
செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி
உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம்
தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா
பரிதாபமும் பாவமும் தீரவே (வருகலாமோ)
No comments:
Post a Comment