Thursday, August 14, 2025

குரு வந்தனம் - என் மனத்துதித்தவனே - En Manathuthithavane

 
என் மனத்துதித்தவனே

En Manathuthithavane

----------------------

ராகம் : சிந்துபைரவி

-----------------------

என் மனத்துதித்தவனே

தபோ வனத்திருப்பவனே |

என் உளத்திலுனை ஒரு கணத்தில் நினைத்தால்

அனைத்தும் தருபவனே |

 

சினத்தை வென்றவனே

அறமெனும் தனத்தில் நின்றவனே

இந்த ஜகத்தின் ஆண்டவனே

இகபர சுகத்தைத் தருபவனே |

 

கிடைத்தற் கரியோனே

சித்த லிங்க மடத்தில் உறைவோனே |

எந்த இடத்தும் இருப்போனே

பவ சங் கடத்தை அறுப்போனே |

 

அப்பனுக்கு உபதேசம் செய்த ஞான

சுப்பனும் நீ தானோ |

முப்பிடி அவலை முயன்று புசித்த

கண்-ணப்பனும் நீ தானோ |

 

ஒப்பிலா மாமணியே

நீ இப்பவே வந்தருள்வாய் – உன்னை

எப்பவும் போற்றிடுவேன்

என் அப்பனே ஆண்டிட வா|

 

விரித்த சடையுடன் கரித்தோல் உரித்துச்

சிரித்து நின்றவன் நீ பின் திரி

புரத்தை எரித்தாறு முகத்தை அளித்து என்

உளத்தை பறித்தவனும் நீ |

 

என் மனத்தே புகுந்திடுவாய் உன்னிரு

பதத்தை யுகந்திடுவாய் அஹமெனும்

மதத்தை ஓட்டிடுவாய் அம்பிகை

பதத்தை காட்டிடுவாய் |

 

சித்தமிரங்காதா என்

பித்தமும் தெளியாதா

உத்தம குருநாதா ஆண்டிடும்

அத்தனே அருள் நீ தா |

 

எந்நாட்டவரும் போற்ற

இந் நாட்டிலவதரித்தாய் என் மன

ஆட்டமதை நிறுத்தி மெய்ஞான

நாட்டமுறச் செய்வாய் |

 

தைக் கிருத்திகையில் உதித்தவா என்னைத்

திருத்தி அமைக்க வந்தவா மங்கள

புரிதனில் தோன்றியவா பணியும்

ஹரிதாஸனுக் கருள் செய்யவா |

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...