Monday, August 18, 2025

கண்ணன் பாமாலை - சின்ன கண்ணா நீ - Chinna Kanna Nee

சின்ன கண்ணா நீ - Chinna Kanna Nee

-----------------

சின்ன கண்ணா நீ என் முன்னே வந்தால்
அதுதான் என் ஜென்ம சாபல்யமே!!
கண்மணியே கட்டிக்கரும்பே காத்திருக்கின்றேன் ஓடிவாராய்!!

என் கண்ணை பொத்தும் உன் கைகளிலே
வெண்ணையின் வாசம் வீசுதடா...
வெண்ணை சிதறிய பாதையிலே சென்றால்
கண்ணா நான் உண்னை கண்டு கொள்வேன்...
என் கண்ணே நான் உண்னை கண்டுகொள்வேன்
என் கண்ணே நான் உண்னை கண்டுகொள்வேன்
என் செல்லமே! என் தெய்வமே! நான் உண்னை கண்டு கொள்வேன்...
 
தத்தி தவழ்ந்து நீ நடந்தால்
உன் கண்டை சிலம்பொலி கேட்குதடா
தித்திக்கும் தீங்குழல் ஓசையிலே
கண்ணா நான் எனை மறந்துவிட்டேன்
கண்ணா நான் எனை மறந்துவிட்டேன்
என் செல்லமே! என் தெய்வமே! கண்ணா நான் எனை மறந்துவிட்டேன்...

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...