அஞ்சேல் அஞ்சேல் இனி – Anjel Anjel Ini
-------------------
இயற்றியவர் : மாயுரம் விஸ்வானந்த சாஸ்திரி
ராகம் : குந்தலவராளி
-------------------
அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சமும் அஞ்சேல் - அஞ்சுவோர்க்
அபயம் அளிக்கும் சரவணன் இருக்க
அபயம் அளிக்கும் சரவணன் இருக்க
அனுபல்லவி
சஞ்சலம் மிகவடைந்து அஞ்சிடும் உன்னையே
மிக்க கொஞ்சி வளர்த்து - அடரிக்கும் செண் சிலம்பன் இங்கிருக்க
மிக்க கொஞ்சி வளர்த்து - அடரிக்கும் செண் சிலம்பன் இங்கிருக்க
நாதன் என்றொருவன் உண்டு நீ அதை மறந்ததேன்
விஸ்வநாதனுக்கும் நன்மையே அருளும் கோன்
பதாங்கள் பணியாமல் வீண் விவாதங்கள் புரிவதேன்
வாதனை அகற்றி உனை ஆதரித்திடுவான் இடார்க்கு
விஸ்வநாதனுக்கும் நன்மையே அருளும் கோன்
பதாங்கள் பணியாமல் வீண் விவாதங்கள் புரிவதேன்
வாதனை அகற்றி உனை ஆதரித்திடுவான் இடார்க்கு

No comments:
Post a Comment