வழிமறைத்திருக்குதே மலைபோலே – Vazhimaraithirukuthe Malaipole
--------------
இயற்றியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : தேசிய தோடி
--------------
வழிமறைத்திருக்குதே மலைபோலே ஒரு மாடு படுத்திருக்குதே. (வழி)
அனுபல்லவி
பாவிப்பறையனிந்த வூரில்வந்து மிவன் பாவந்தீரேனோ உன் தன்
பாதத்தில் சேரேனோ ஏறேனோ சிவலோகநாதா மாடு (வழி)
சரணம்
தேரடியில்நின்று தரிசித்தாலும்போதும் கோவில்வர மாட்டேனே ஐயே
ஓரடிவிலகினால்போது மிங்கேநின்று உற்றுப்பார்க்கச்சற்றே விலகாதோ மாடு (வழி)

No comments:
Post a Comment