Sunday, July 20, 2025

நடராஜர் பாமாலை - சிவலோக நாதனைக்கண்டு – Sivaloga Nathanai kandu

 
சிவலோக நாதனைக்கண்டு – Sivaloga Nathanai kandu

----------------
இயற்றியவர் : கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : மயமாளவ
----------------

சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்

பவபயங்களைப் போக்கி அவர்  பரம பதத்தைக் கொடுப்பாரந்த - (சிவ)

 

அற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம்

கற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே யெண்ணி - (சிவ)

 

ஆசைக்கடலில் விழுந்தோமதால் அறிவுக்கறிவை யிழந்தோம்

பாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம் - (சிவ)

 

மானிடசன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக்கரங்க ளளித்தார்

தேனும்பாலும் போலே சென்று தேரடியில் நின்றுகொண்டு - (சிவ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...