Tuesday, June 10, 2025

ராமர் பாமாலை - ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் - Sri Ramachandranukku Jeya Mangalam

 

ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் - Sri Ramachandranukku Jeya Mangalam

இராம நாடகம்

ராகம் : அசாவேரி

இயற்றியவர்ஸ்ரீ அருணாச்சல கவிராயர்

 -----------------

ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் - நல்ல

திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம் (ஸ்ரீராம)                                                                          

அநுபல்லவி

மாராபி ராமனுக்கு மன்னுபரந் தாமனுக்கு

ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு (ஸ்ரீராம)

சரணம்

கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்

கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்

புண்டரீகத்  தாளனுக்கு  பூச்சக்கிர ஆளனுக்கு

தண்டுளவத் தோளனுக்கு சானகிமணாளனுக்கு (ஸ்ரீராம)


கோவைமணி வாயனுக்கு மாயனுக்கு மங்களம்

கோதண்ட கையனுக்கு மெய்யனுக்கு மங்களம்

தாவுகுண சீலனுக்கு  சத்தியவி லாசனுக்கு

தேவர்அனு கூலனுக்கு  தெசரதன்பாலனுக்கு  (ஸ்ரீராம)


பகிரண்ட நாதனுக்கு வேதனுக்கு   மங்களம்

பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்

சகல உல்லாசனுக்கு  தருமந்த காசனுக்கு

அகிலவி வாசனுக்கு அயோத்தியா லாசனுக்கு (ஸ்ரீராம)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...