Tuesday, June 10, 2025

ராமர் பாமாலை - ராமனுக்கு மன்னன் முடி - Ramanukku Mannan Mudi

 

ராமனுக்கு மன்னன் முடி - Ramanukku Mannan Mudi

ராகம் : ஹிந்தோளம்

இயற்றியவர் : அருணாசல கவிராயர்

 ----

ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே

நன்மை உண்டொருக்காலே -                                   (ராமனுக்கு)

அனுபல்லவி

பாமரமே உனக்கென்னடி பேச்சே

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சே -  (ராமனுக்கு)

சரணம்-1

இந்த வார்த்தை சொன்னாய் எனக்கெவர் நேரடி

பிரம்மாதிகளும் வருவாரடி

இதுவே நல்ல சீரடி - வாயாடாதே பாரடி

யாரடி எனக்கு சரி   - (ராமனுக்கு)

சரணம்-2

பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி

நம்மையெல்லாம் காத்தவன்டி

பட்டம் கட்ட ஏற்றவன்டி

நாலுபேரில் மூத்தவன்டி

அவன் என் கண்மனி  -  (ராமனுக்கு)

சரணம்-3

பரதன் பட்டம் கட்டாவிட்டால் நட்டியோ

அவன் சர்க்கரைக் கட்டியோ

என் பிள்ளை ராமன் எட்டியோ

நான்தான் என்ன மட்டியோ

வெட்டிப் போடுவேன் உன்னை  - (ராமனுக்கு)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...