Saturday, June 28, 2025

கண்ணன் பாமாலை - விஷமக்கார கண்ணன் – Vishamakaara Kannan

 

விஷமக்கார கண்ணன் – Vishamakaara Kannan

------------

ராகம் : செஞ்சுருட்டி

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்

-----------

விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

பொல்லாத விஷமக்கார கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி

நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன்  ||

 

வேண்ணை பானை மூடக்கொடது

இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது

இவன் அம்மா கிட்ட சொல்லக்கூடாது

சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது

இவனை சும்மா ஒரு பேச்சுக்காணும் திருடனென்று சொல்லிவிட்டால்

அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடன் என்பான் ||

 

நீலமேகம் போலே இருப்பன்

பாடினாலும் நெஞ்சில் வந்து குடி இருப்பன்

கோலப்புள்ளங்குழல் ஊதி கோபிகளை கள்ளம்மாடி

கொஞ்சம்புற வெண்ணை தாடி என்றுகேட்டு ஆட்டம்மாடும்  ||

 

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அழைப்பான் (கண்ணன்)

மூக்காரி ராகம் பாடச்சொல்லி வம்புக்ழுப்பான்

எனக்கது  தெரியாதென்றால் நெக்குருக கிள்ளிவிட்டு

விக்கி விக்கி அழும்போது இது தாண்டி மூக்காரி என்பான் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...