Saturday, June 28, 2025

கண்ணன் பாமாலை - மாடுமேய்க்கும் கண்ணே – Maadumeikum Kanne

 

மாடுமேய்க்கும் கண்ணே – Maadumeikum Kanne

---------------

ராகம் : செஞ்சுருட்டி

இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்

---------------

மாடுமேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

 

காய்சின பாலு தரேன் கல்கண்டு சீனி தரேன்

கைநிறைய வெண்ணை தரேன் வெய்யிலிலே போக வேண்டாம் (மாடு)

 

காய்ச்சின பாலும் வேண்டாம் கல்கண்டு சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து ஒருநொடியில் திரும்பிடுவேன்

போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே (மாடு)

 

யமுனா நதி கரையில் எப்பொழுதும் கள்வர்பயம்

கள்வர் வந்து உனை அதித்தல் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு)

 

கள்ளனுகோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும்மம்மா

கள்வர் வந்து எனை அடித்தல் கண்டதுண்டம் செய்திடுவேன்

போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே (மாடு)

 

கோவர்தனகிரியில் கோரமான மிருகங்கள் உண்டு

கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

காட்டு ம்ருகங்களெல்லாம் என்னை கண்டால் ஓடி வரும்

கூட்ட கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்

போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே (மாடு)

 

பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டல்

என்ன பதில் சொல்லவேண்ட என்னுடைய கண்மணியே (மாடு)

 

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்

தேடியே  நீ வருகையிலே ஓடிவந்து நின்றிடுவேன்

போகவேணும் தாயே தடை சொல்லாதே நீயே (மாடு)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...