Saturday, June 28, 2025

கண்ணன் பாமாலை - புல்லாய் பிறவி தரவேணும் கண்ணா – Pullai Piravi Tharavenum Kanna

 

புல்லாய் பிறவி தரவேணும் கண்ணா – Pullai Piravi Tharavenum Kanna

---------------------------

ராகம் : செஞ்சுருட்டி

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்

--------------

புல்லாய் பிறவி தரவேணும் கண்ணா

புனிதமான பல கோடி பிறவி தந்தாலும் ப்ருந்தாவனமதில் ||

 

புல்லாகினும் நெடுநாள் நில்லாது ஆதலினால்

கல்லாய் பிறவி  தரவேணும்

கமலமலரிழைகள் அனைய எனது உள்ளம்

புளகிதம் ஊற்றிடும் பவமற்றிடுமே ||

 

ஒருகனம் உன் பதம் படும் எந்தன் மேலே

மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே

திருமேனி என் மேலே அமர்திடும் ஒரு காலே

திருமகள்லேன மலரடி பெயர்ந்துன்னை

தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே

திசைஇசை  எங்கணும் பரவிடும் குழலிசை

மயங்கி வரும் பல கோபியருடனே

சிறந்தரசம் மிதில் நடம் நீ ஆடவும்

ஸ்ருதியோடு லயம்மிக கலந்து பாடவும்

திளைப்பிலே வரும் களிப்பிலே

எனக்கினை யாரென மகிழ்வேனே

தவமிங்கு சுரரொடு முனிவரும் இயலா

தனித்த பெரும்பெர்ரடைவேனே

எவ்வுயருக்கும் உள்கலக்கும் இறைவனே

யமுனை துறைவனே (எனக்கும் ஒரு)||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...