Wednesday, June 25, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - காஞ்சி மாநகர் போக வேண்டும்

 


காஞ்சி மாநகர் போக வேண்டும் – Kanchi Maangar Poga Vendum

---------------

இயற்றியவர் : ஸ்ரீ உடையாளூர் கல்யாணராமன்

 ------------------------

காஞ்சி மாநகர் போக வேண்டும் - எங்கள்

காருண்ய மூர்த்தியை காண வேண்டும் (காஞ்சி)

 

உத்தமர்கள் வணங்கும் குரு பீடம்

சித்தர்கள் போற்றும் குரு பீடம்

கற்றவர்கள் கூடும் குரு பீடம்

காமகோடி ஜகத் குரு பீடம் (காஞ்சி)

 

எளிமை நிறைந்த குரு பீடம்

யாவரும் வணங்கும் குரு பீடம்

கவலைகள் போக்கும் குரு பீடம்

காமகோடி ஜகத் குரு பீடம் (காஞ்சி)

 

அத்வைதம் வளர்க்கும் குரு பீடம்

தத்துவம் நிறைந்த குரு பீடம்

கருணையின் சிகரமாம் குரு பீடம்

காமகோடி ஜகத் குரு பீடம் (காஞ்சி)

 

தவநிலை வளர்க்கும் குரு பீடம்

தன்னிகர் இல்லா அருள் பீடம்

கலைகள் வளர்க்கும் குரு பீடம்

காமகோடி ஜகத் குரு பீடம் (காஞ்சி)

 

மடமையை போக்கும் குரு பீடம்

திடமான ஞானம் அருள் பீடம்

நடமாடும் தெய்வமாம் குரு பீடம்

நமது காஞ்சி ஐகத் குரு பீடம் (காஞ்சி)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...