Wednesday, June 25, 2025

சிவன் பாமாலை - ஆளாவதென்னாளோ சிவமே – Aalavathennalo Sivame

 

ஆளாவதென்னாளோ சிவமே – Aalavathennalo Sivame

---------------

இயற்றியவர் : ஸ்ரீ ஊத்துக்காடு வேங்கடகவி

ராகம் : பராஸ்

 ---------------

ஆளாவதென்னாளோ சிவமே (உன்)

அடியார்க்கடியார்க்கடியனாய் மீளாத

 

கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே

இளம் தாளான கமலமுட்புறமே பதம்

ததிக்க தாமென விதித்த தாளமும்

துதிக்கதாம் என மதித்து கதிபெற       (ஆளாவது)

 

புன்மை பிறவி போக வேணும் எடுத்தால்

புண்ணிய பிறவிகள் ஆக வேணும் 

இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும்

இல்லா பதத்திணையாக வேணும்       (ஆளாவது)

 

சீர்காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன் மணிவாசக சுந்தரர் எனும்

 

சிறுத்தொண்ட திருநீலகண்ட விறன்மிண்ட நமிநந்தி தண்டி அடிகள் எனும்

 

ஐயடிகள் காடவர்கோன் ஆனாய கணம்புல்ல நின்றசீர்நெடுமாற 

கணநாத முனையடுவாரொடு திருநாளைப் போவார் எனும்

 

மெய்ப்பொருளார் பெருமிழலைக்குரும்பர் ஏனாதிநாத கலிக்கம்பர் 

அமர்நீதி நரசிங்கமுனையரையர் சடைய சண்டீச கலியகாரியாரெனும்

 

மானக்கஞ்சார நேச பூசலாரொடு வாயிலார் சோமாசிமாற 

மங்கையர்க்கரசி குங்கிலியக்கலயார் இளையாங்குடி

மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புலி சாக்கியர் சத்தியர் சிறப்புலியர்

செறுத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர் இயற்பகையர் எனும்

 

திருமூல முருக மூர்த்தி அப்பூதி ருத்திரபசுபதியார் இசைஞானியர்

நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர்கோனொடு

நீலகண்ட யாழ்பாணர் புகழ்சோழ நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர்கோனொடு

காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத்தொண்டர் எனும்

இன்னவரில் ஒருவரைப் போலே நான்

இணையொன்றும் இல்லா பதத்தினையாக வேணும்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...