Thursday, June 12, 2025

முருகர் பாமாலை - சின்னஞ்சிறு குழந்தை ஒன்று - Chinnanchiru Kuzhanthai Ondru

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று - Chinnanchiru Kuzhanthai Ondru
------------------------

ராகம் : திலங்

---------------------

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்

சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது

வெற்றி தரும் அதன் கையில் வேலிருந்தது

வில்லும் அதன் விழி எந்தன் மேலிருந்தது

நெற்றி திருநீறு பாலை போலிருந்தது

நீலமயில் மீதிலதன் காலிருந்தது | |

 

வண்ணமணி மார்பில் முத்து மாலை கிடந்தது

வந்த கிண்கிணி ஓசை காதில் தொடர்ந்தது

பொன்னான அதன் முகமோ பூவை வென்றது

போற்றும் எந்தம் பெயர் எதுவோ முருகன் என்றது | |

 

கண்களை நான் திறந்தேன் காட்சி மறைந்தது

கண்ட அந்த காட்சி அதன் ஆட்சி விரைந்தது

மண்ணுறங்கும் எனினும் எந்தன்மனமுறங்கவில்லை

மயக்கும் அந்த முகத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை

சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கனவில் வந்தது அதன்

சிங்காரா புன்னகையால் என்னை கவர்ந்தது | |

 

கனவில் வந்தது முருகன்....

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...