கலியுக வரதன் கண்கண்ட - Kaliyuga Varathan Kankanda
--------------------
ராகம் : பிருந்தாவன சாரங்க
இயற்றியவர் : பெரியசாமி தூரன்
-----------------------
கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே ||
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் ||
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தான்
கார்த்திகை பெண்டீர்கள் அணைப்பில் வளர்ந்தான்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான் ||

No comments:
Post a Comment