என்னகவி பாடினாலும் - Ennakavi Paadinaalum
------------------
ராகம் : நீலாம்பரி
இயற்றியவர் : அணயப்பட்டி ஆதிசேஷையர்
--------------------
என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா...
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
உன் மாமியும் பார்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (லக்குமி மாமியோ) ||
அட்சர லக்ஷம் தந்த அன்னல் போஜராஜன் இல்லை
என்னை பட்சமுடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை
ஈஜகத்தில் நீநினைந்தால் எனக்கோர் குறைவில்லை
லட்சியமோ உனுக்கு உன்னை நான் விடுவதில்லை (அலட்சியமோ உன்னக்கு) ||

No comments:
Post a Comment