Thursday, June 12, 2025

கண்ணன் பாமாலை - ஆசைமுகம் மறந்து போச்சே - Aasai Mugam Maranthu Poche

 

ஆசைமுகம் மறந்து போச்சே - Aasai Mugam Maranthu Poche

---------------

ராகம் : ராகமாலிகா

இயற்றியவர் : மகாகவி சுப்ரமண் பாரதி

---------------

ஆசைமுகம் மறந்து போச்சே இதை

யாரிடம் சொல்வேன் அடி தோழி 

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் 

நினைவு முகம் மறக்கலாமோ ||

 

கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்

கண்ணன் அழகுமுழுதில்லை 

நன்னு முகவடிவு கானில் அந்த 

நல்லமலர் சிரிப்பை காணோம் ||

 

தேனை மறந்திருக்கும் வண்டும் 

ஒளிச்சிறப்பைமறந்துவிட்ட பூவும் 

வானை மறந்திருக்கும் பயிரும்

இந்த வையம்முழுதும் இல்லை தோழி ||

 

கண்ணன் முகம் மறந்து போனால் 

இந்த கண்கள் இருந்தும் பயனுண்டோ 

வண்ணபடமும் இல்லை கண்டால் 

இனி வாழும் வழி என்னடி தோழி||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...