Thursday, June 12, 2025

ராமர் பாமாலை - கண்டேன் கண்டேன் சீதையை – Kanden Kanden Seethayai


 கண்டேன் கண்டேன் சீதையை – Kanden Kanden Seethayai

 ------------------

ராகம் : பாகேஸ்ரீ 

இயற்றியவர் : அருணாசல கவிராயர்

---------

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை

கண்டேன் ராகவா நான்

 

அண்டரும் காணாத இலங்காபுரியில்

அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை

 

பனிகால வாரிஜம் போல நிறம் பூசி

பகலோடு யுகமாக கழித்தாலே பிரயாசி

நினைதங்கி ராவணன் அந்நாள் வர

ச்சிச்சி நில்லடா என்றே ஏசி

 

தனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி

சாரும் போதே நானும் சமயமிதே வாசி

இனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி

ராம ராம ராம என்றெதிர் பேசி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...