Thursday, June 12, 2025

ராமர் பாமாலை - ஆரோ இவர் யாரோ - Yaaro Ivar Yaaro

ஆரோ இவர் யாரோ - Yaaro Ivar Yaaro

 ------------------

ராகம் : பைரவி

இயற்றியவர் : அருணாசல கவிராயர்

 --------------------------

ஆரோ இவர் யாரோ- என்ன  பேரோ அறியேன் (ஆரோ)

அநுபல்லவி

கார் உலாவும்  சீர்  உலாவும்  மிதிலையில்

கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் - (ஆரோ)

சரணங்கள்                    

பண்ணிப் பதித்தாற் போல் இரு  ஸ்தனமும் - கூட பாங்கியர்கள் இன்ன முந்துரைத்

தனமும்   எண்ணத்தாலும் வண்ணத்தாலும்

பங்கயப் பெண்ணைப் போல் கண்ணிற் காணும்  மங்கையர் -(ஆரோ)

 

பாக்கியம் என்ப திவர்தெரி சனமே அதிங்கே

பலித்ததென்ன புண்ணியமோ  மனமே

மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும் பெண்கள்

பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ கண்கள் -  (ஆரோ)

 

சந்திர விம்பமுக மலராலே -என்னைத் தானே பார்க்கிறார் ஒருகாலே

அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்

இந்த  நாளில்  வந்து  சேவை  தருகிறார்  -  (ஆரோ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...