Saturday, June 28, 2025

சிவன் பாமாலை - எப்படி பாடினாரோ அடியார் – Eppadi Paadinaaro Adiyar

 

எப்படி பாடினாரோ அடியார் – Eppadi Paadinaaro Adiyar

 -------------------------

ராகம் : பீம்ப்ளாஸ்

இயற்றியவர் : சுத்தானந்த பாரதி

-------------------------

எப்படி பாடினாரோ அடியார்

அப்படிபாட நான் ஆசைகொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும்

அருள்மணிவாசகரும் பொருளுணர்ந்து உன்னையே ||

 

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்

அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும்

கருணை கடல் பெருகி காதலினால் உருகி

கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...