Friday, June 20, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - நடமாடும் தெய்வம் நல் வழிகாட்டும்


நடமாடும் தெய்வம் – Nadamaadum Deivam Nal Vazhikaattum Deivam

--------

ஸ்லோகம்

ஞானமார்க்க நிதர்சனாய நீலகண்ட ஸ்வரூபிணே

ஸத்ய ஞானாவதாரம் வந்தே ஸத்குரும் சந்த்ரசேகரா

காமகோடிஸ்வரம் வந்தே காமாக்ஷி பாத சேவகம்

பவாம்போதி மகானுலோகா அனுகிரக தாரயா

தவசரணம் மமசரணம் ஸத்குரு சந்த்ரசேகரா

 

அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்

ஸ்ரீசந்த்ரசேகர ஸரஸ்வதி ப்ரணமாமி முதாந்வஹம்

அத்வைத போத குரோ ஆத்ம விசார குரோ

வித்வத்ஜன போஷக ஸ்ரீ பரம குரோ சந்த்ரசேகரா

நடமாடும் தெய்வமே நாடி வந்தேன் துயர் துடைப்பாய்

காருண்ய மூர்த்தியே காஞ்சி நிவாஸ குரு

காமகோடி பீடவாச குரோ ஸ்ரீ சந்த்ரசேகரா

சங்கர ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமின்

சங்கரானந்த விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமின்

குருநாதா குருநாதா குருநாதா குருநாதா...

-------

கீர்த்தனம்

-------

நடமாடும் தெய்வம் நல் வழிகாட்டும் தெய்வம்

சதா சிவமான தெய்வம் சந்திரசேகரேந்திர தெய்வம்

குருவான தெய்வம் நம் குறை தீர்க்கும் தெய்வம்

கண்கண்ட தெய்வம் காஞ்சி காமகோடி தெய்வம் (நடமாடும்)

 

கனிவான அவர் பார்வை பிணியெல்லாம் போக்கும்

கடலான அருள் வெள்ளம் நமையெல்லாம் காக்கும்

அறியாமை இருள் நீக்கி உயர் ஞானம் சேர்க்கும்

அவரே நம் குலம் காக்கும் அன்பான தெய்வம் (நடமாடும்)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...