Friday, June 20, 2025

குரு வந்தனம் - நான் ஒழிந்து நீயாக வேண்டும் - Naan Ozhinthu Neeyaaga Vendum

 

நான் ஒழிந்து நீயாக வேண்டும் - Naan Ozhinthu Neeyaaga Vendum

ஸ்லோகம்

மந்தஸ்மித முகாம் போஜம் மஹனீய குணார்ணவம்

மதுர பாஷிணம் சாந்தம் ஸர்வபூத தயாபரம்

பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம்

ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞான ஸித்தயே

 

ஸங்கீத ஸாஸ்த்ர பண்டித ஸ்ரேஷ்டம்

நாதயோகேன ஸம்ப்ராப்தித அத்வைத பாவம்

ஸத்குரு ஸ்ரேஷ்ட தமம் ஞானதேவம்

பஜேஹம் கோபாலகிருஷ்ண மூர்த்திம்

நிதயே பக்தி தத்வானாம் கதயேச

மஹாத்மன அஸ்மாகம் பதயே

துப்யம் ப்ரேமிகாய நமோ நம:

 

உத்தரை பகைவரென்றும்

மூர்க்கரை உறவரென்றும்

பித்தனாய் அநேக ஜன்மம்

உலகில் பிறந்து இறந்து

உழலுவோற்கு பக்தியால்

யோகம் காட்டி யோகத்தால்

ஞானம் காட்டும் ஸத்குரு

ஞானானந்தா நின் மலர்ப்பதம்

போற்றி போற்றி...

----------------

நான் ஒழிந்து நீயாக வேண்டும் குருநாதா

நாதாந்த துய்யனே வேதாந்த மெய்யனே

தானாகி நின்றதை ப்ரஹ்மம் என்று கூறுவார்

ப்ரம்மாகி நிற்பதே நீ என்று கூறுவேன் - (நான்)

 

மானாடும் மயிலாடும் ஆட்டத்திற்கு அளவுண்டு

மனமாடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை

அளவில்லா ஆட்டத்தால் அகிலத்தில் அலைகின்றேன்

அரும்பாடுபட்டும் உள்ளே அமைதியும் இல்லை

அமைதியில்லா வாழ்வு அடியேனுக்கு எதற்காக

அழித்துவிடு எந்தன் ஆணவத்தை

ஆணவம் அழிந்தால்தான் அறியமுடியும் உன்னை

அண்டிவந்தேன் ஞானானந்த வள்ளலே - (நான்)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...