Friday, June 20, 2025

குரு வந்தனம் - மதகஜ கமனா மங்கள சரணா – Mathagaja Gamana Mangala Sarana

 

மதகஜ கமனா மங்கள சரணா – Mathagaja Gamana Mangala Sarana

----------

மதகஜ கமனா மங்கள சரணா

மதுர நாயக ஜய ஜய ஹே!

நறுமலர் தூவி மலரடி தொழுவோம்

மாதுரி ரமணா ஜய ஜய ஹே! (மதகஜ)

 

எத்தனை தெய்வம் எதிர் வந்தாலும்

என் இதயம் எவர்க்கும் இடம் தருமோ?

இன்னுயிரே உன் இணையடி அன்றி

எதிலும் எனக்கு ருசி வருமோ? (மதகஜ)

 

நீயே தர்மம் நீயே செல்வம்

நின் பொன்னடி நிழலே பெருவீடு

என் குலம் வாழ வந்த குருபரனே

இந்த குவலயத்தில் எவர் உனக்கீடு? (மதகஜ)

 

ஆடி ஆடி அகம் கசிந்துருகும்

அன்பர் அணியில் ஒரு புறமாய்

நான் பாடும் பணியே பணியாய் அருள்வாய்

பரமா பரம புரத்தரசே (மதகஜ)

---------

ஜய ஹோ ஜய ஹோ குரு தேவா

ஜய ஹோ ஜய ஹோ குரு தேவா

ஜய ஹோ ஜய ஹோ குரு நாதா

ஜய ஹோ ஜய ஹோ குரு தேவா

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...