Tuesday, June 24, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - காமகோடி அருளிருந்தால்

 


காமகோடி அருளிருந்தால் – Kamakoti Arul Irunthaal

---------------

ராகம் : காபி

இயற்றியவர் : ருக்மிணி ரமணி

---------------

காமகோடி அருளிருந்தால் நாமம் கோடி பாடலாம்

காமமாதி நோயகன்று நாளும் இன்பம் தேடலாம்

 

வாமபாகன் கயிலை ஈசன் பூமி போற்றும் காலடியில்

க்ஷேமமாக நாமும் வாழ சிவகுருவின் பாலனானான்        (காமகோடி)

 

சிந்தையிலே சிவஜபம் சிரிப்பினிலே அருள் மயம்

விந்தையிலே ஓர் இமயம் விரிகடலின் மனோலயம்

எந்தன் உயிர்க்கு ஆதாரம் எங்கும் நிறை ப்ரம்மமயம்

சந்தனத்தின் மனம் கமழும் சத்குருவே எனக் கபயம்          (காமகோடி)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...