Wednesday, June 11, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை

ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை - Maha Periyava Navarathna Malai

---------

இயற்றியவர் : சாணு புத்திரன்

---------

ஞாலங் காக்கும் உமையாள் பதியோன்

ஞானக் குழந்தை வடிவா னழகன்

ஞாலம் உடைசால் தொந்தியன் அருளில்

ஞானக் குருவை போற்றிடு வோமே! (1)

 

“சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்”

பூக்கும் புலர் காலையில் தினமும்

நோக்கும் விழி யாலருளும் பதியாம்

வாக்கில் அறமும் உடைசால் குருவாய்

காக்கும் கருணா நிதியே சரணம்! (2)

 

“சந்திர சேகர குருவே சரணம்…”

தேறா தெதுவும் தேறித் தெளிய

தாரா வரமும் தந்தெமைக் காக்க

நாரா யணனாய் நரணெனக் கருளும்

பாதாம் புயமுடை பதியே சரணம்! (3)

 

“சந்திர சேகர குருவே சரணம்…”

மூவாப் பிணியும் வெகுண்ட துமோட

காணா தெதுவும் தீண்டா தருள

தீராத் துயரும் தீர்த்தருள் பெறவே

கோணா வாழ்வின் நிதியே சரணம்! (4)

 

“சந்திர சேகர குருவே சரணம்…”

சாடா வாழ்வில் நாணமும் பேதமும்

நாடா தருள்வாய் நலம்பல தருவாய்

கூடா நட்பின் குறையும் களைந்தே

வாடா வாழ்வருள் கதியே சரணம் ! (5)

 

“சந்திர சேகர குருவே சரணம்…”

சூரர் வினையும் சூழா தருளும்

தீரர் திருத்தாள் பணிந்தேத் துவமே

வீரத் தெழிலாய் வதனந் தருவாய்

வீழா வாழ்வருள் திருவே சரணம்! (6)

 

“சந்திர சேகர குருவே சரணம்…”

சூலம் கொண்டருள் சுந்தரி எந்தரி

தூலம் காத்திடும் தூயநற் சங்கரி

நாளும் எமைகாத் தருளும் பதமும்

நல்கும் காஞ்சிநற் குருவே சரணம்! (7)

 

“சந்திர சேகர குருவே சரணம்…”

நேயம் கொண்டிட நெறிதந் தவராய்

காயம் திரித்தே தவமேற் பதியாய்

மாயம் எதுவென மதிதந் தருள்வாய்

தாயம் தந்தருட் தருவே சரணம்! (8)

 

“சந்திர சேகர குருவே சரணம்…”

காலம் எல்லாம் கதியாய் நின்னருட்

கோலம் மனதுள் தியானித் தனமே

நாளும் இனியாம் நல்லன கொண்டிட

தாளும் பணிந்தோம் சசி சேகரனே! (9)

 

“சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்”

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...