பார்த்துக்கிட்டே இருக்க - Parthukitte Iruka Thonuthu
------
பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
பெரியவாளை பிரிந்து வர மனமும் மறுக்குது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா
ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா
விஸ்வரூப தரிசனம் காண...
பக்தர் விடியகாலை காத்திடும் போது
வாழ்த்தொலிகள் ஒலித்திடும் போது
மேனா விளக்கினிலே துயில் எழும் போது
பெரியவாளை பார்த்துகிட்டடே இருக்கத்தோணுது
மங்கள நீராடிடும் போது
மெதுவாய் மூழ்கியே எழுந்திடும் போது
மேலாடை போர்த்திடும் போது
திருநீர் மேனியெல்லாம் பூசிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா
ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா
அனுஷ்டானம் துவக்கிடும் போது
அழகாய் ஆசமனம் புரிந்திடும் போது
அதிகாலை ஒரு மணி நேர..
ஜபத்தில் ஆழ்ந்தழகாய் அமர்ந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஜபம் முடிந்து நோக்கிடும் போது
கண்ணால் ஜெயம் உனக்கு என்றிடும் போது
ஜகம் எல்லாம் மறந்திடும் போது
அந்த க்ஷண நேர பூரிப்பின் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா
ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா
கை தட்டி அழைத்திடும் போது
பாலு ஸ்ரீகண்டன் உடன் வரும் போது
வேதபுரி விரைந்திடும் போது
மௌலி குமரேசன் குழைந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
தண்டமதை ஏந்திடும் போது
அழகாய் தளிர்நடை தான் போட்டிடும் போது
தொண்டர் படை உடன் வரும் போது
நாமும் திருவீதி வலம் வரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா
ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கராஹர
பூவினந்தான் சேர்ந்திடும் போது
கொன்றை சரமாகத் தான் வரும் போது
தாமரையும் உடன் வரும் போது
சிரம் மேல் சூட்டியுடன் சிரித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
வந்தோரை விளக்கிடும்போது
அவரின் தந்தை யார் என்றிடும் போது
சொந்த ஊர் ஈதெனும் போது
அன்னார் முந்தை எல்லாம்
தான் சொல்லும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா
ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா
மானசீக பூஜையின் போது
கரத்தால் வந்தனைகள் புரிந்திடும் போது
உபசாரம் பல செய்யும் போது
மலர்கள் திருக்கரத்தால் கொட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
லென்ஸ் எடுத்து படித்திடும் போது
கையால் டார்ச் அடித்து படித்திடும் போது
புத்தகங்கள் படித்திடும் போது
கீழேவைக்காமல் முடித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா
ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா
தஞ்சமென வந்திடும் போது
ஏழை திருமணங்கள் என வரும் போது
அஞ்சேல் என அருளிடும் போது
வாரி தங்கம் என வழங்கிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
பால குரு படித்திடும் போது
அங்கே பாஷ்ய பாடம் நடந்திடும் போது
பெருங்குருவாய் அமர்ந்திடும் போது
பரிவாய் தீஷண்யம் வீற்றிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா
ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா
சர்ச்சைகள் நடந்திடும்போது
தானும் சந்தேகம் கேட்டிடும் போது
விற்பன்னர் விளக்கிடும் போது
தெளிவாய் விளக்கங்கள் தான் தரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
வலக்கரத்தால் அருளிடும் போது
இதமாய் இடக்கரத்தால் அருளிடும் போது
இரு கரத்தால் அருளிடும் போது
மேலே உயர்க்கரத்தால் அருளிடும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
.jpeg)
No comments:
Post a Comment