கருணை ததும்பும் முகமொன்று
– Karunai Thathumbum Mugamondru
------------
பாடல் இயற்றியவர் : திரு ஆனந்த் வாசுதேவன்
ராகம் : ஆபோகி
------------
கருணை ததும்பும் முகமொன்று கண்டேன்
அருணை அருகில் தபோவனம் அடைந்தேன்
ஸத்குரு ஞானானந்தர் பதமலர் பணிந்தேன்
அருள்வலையில் விழுந்து பேரானந்தம் அடைந்தேன் - (கருணை)
திக்குத் தெரியாமல் திகைத்தவர்க்கு நல்வழி காட்டினார்
சீரான மார்க்கம் தந்து நமைக் காத்து அருளினார்
பக்தி நெறி பற்றிடும் நன்னெறியைப் புகட்டினார்
முக்தி நெறி நல்கிடும் வழி நமக்கு காட்டினார் - (கருணை)
இன்முகம் கண்டால் மனக்கவலை பறந்திடும்
பன்முகம் அறிந்தால் இருளங்கே விலகிடும்
இருளது விலகினால் திருவருள் தான் கிட்டிடும்
திருவருள் கிட்டினால் சாந்தி அங்கே நிலவிடும்
.jpeg)
No comments:
Post a Comment