Sunday, June 22, 2025

குரு வந்தனம் - என் மனத் துதித்தவனே - En Mana Thuthithavane

 

என் மனத் துதித்தவனே  - En Mana Thuthithavane

---------------

என் மனத் துதித்தவனே

அருணாச்சலத்தினில் இருப்பவனே

 

என் உளத்திலுனை ஒரு சனத்தில்

நினைத்தால் அனைத்தும் தருபவனே

 

ரமணா குருநாதா சிவ சிவ ரமணா குருநாதா

ரமணா குருநாதா ஜெய ஜெய ரமணா குருநாதா

 

ஆனந்தம் தருபவனே

பரமெனும் வனத்தில் நின்றவனே

 

இந்த ஜகத்தின் ஆண்டவனே

திகம்பர சுகத்தை தருபவனே

திகம்பர சுகத்தை தருபவனே

 

கிடைத்த தனியோனே

அருணையில் தவத்தில் உறைவோனே

 

எந்த இடுக்கும் இருப்பானே

வரும் சங்கடம் தீர்ப்போனே

வரும் சங்கடம் தீர்ப்போனே

 

என் மனம் புகுந்திடுவாய்

உன்னிரு பதத்தை உகந்திடுவாய்

 

அகம் எனும் மதத்தை அகற்றிடுவாய்

அன்பெனும் சிவத்தை காட்டிடுவாய்

 

அன்பெனும் சிவத்தை காட்டிடுவாய்

சித்தமிறங்காதா என் பித்தமும் தெளியாதா

 

புவனசர்குரு சிவநாதா

ஆண்டிடும் சந்தனே அருள் நீ தா

ஆண்டிடும் சந்தனே அருள் நீ தா

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...