Saturday, June 21, 2025

ஐயப்பன் பாமாலை - அழகு அழகு அழகு அழகு ஐயப்பன் அழகு – Azhagu Azhagu Azhagu Azhagu Ayyappan Azhagu

 

அழகு அழகு அழகு அழகு ஐயப்பன் அழகு – Azhagu Azhagu Azhagu Azhagu Ayyappan Azhagu

------------------------

அழகு அழகு அழகு அழகு

ஐயப்பன் அழகு

அவர் அடிமலரை பணிபவர்க்கு

யாவுமே அழகு (அழகு)

 

கரிமலையில் ஏறுகின்ற

காட்சியும் அழகு

அந்த கருணாமூர்த்தி தயவினிலே

இறக்கமும் அழகு.

பம்பா நதி நீராடும்

பக்தர்கள் அழகு.

பம்பையிலே சக்தியும்

அழகோ அழகு. (அழகு)

 

கன்னிமூல கணபதியின்

காட்சியும் அழகு

ஸீதா ராமஜெய ஹனுமந்தனின்

சாட்சியும் அழகு.

நீலிமலை ஏற்றத்திலே

நிர்மலம் அழகு அந்த

நித்யானந்தன் கருணையினால்

ஏற்றமும் அழகு. (அழகு)

 

பதினெட்டு படிகளிலும்

தத்துவம் அழகு அந்த

பந்தளத்தில் மாமணியின்

தரிசனம் அழகு

நெய்யாலே அபிஷேகம்

நித்யமும் அழகு

பொன்னம்பல மேட்டினிலே

ஜோதியும் அழகு. (அழகு)

 

அழகு அழகு

அழகு அழகு

ஐயப்பன் அழகு

எங்கள் ஐயப்பன் அழகு

நம்ம ஐயப்பன் அழகு

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...