Saturday, June 21, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - விழி கிடைக்குமா அபய கரம்


விழி கிடைக்குமா அபய கரம் – Vizhi Kidaikumaa Abaya Karam

-----------------------

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா

குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா (விழி கிடைக்குமா)

 

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது

அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி கிடைக்குமா)

 

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குருநாதன்

அருள் கிடைத்தால் குணக்குன்றே உனக்காக

எனை ஆக்குவேன் நினைக்காத துன்பம் பல

எனை வந்து சேரும் போது நினைத்தாலே

அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி கிடைக்குமா)

 

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க

இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா

நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் உன்

அடியில் வைத்து விழியோர படகில்

எனக்கிடம் கிடைக்குமா (விழி கிடைக்குமா)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...