Saturday, June 21, 2025

முருகர் பாமாலை - விளையாட இது நேரமா – Vilayaada Ithu Neramaa

 

விளையாட இது நேரமா – Vilayaada Ithu Neramaa

விருத்தம்

சேந்தனை கந்தனை கந்த கடம்பனை கார்முகில் வேலவனை

சாந்தனை காந்தனை விளங்கு வள்ளி காந்தனை

பழனிமலை பாலனை முருகனை ஒருபோதும்

மறவாதவற்கு ஒரு தாழ்வில்லையே!!

--------------

உல்லாச நிராகுல யோக விதச்

சல்லாப விநோதனு நீ யலையோ

எல்லாமற என்னை இழந்த நலஞ்

சொல்லாய் முருகா சுரபூ பதியே!

சரவணபவா என்று ஒருதரம் சொல்பவர்க்கு

உளத்தினில் நினைத்ததெல்லாம் உடனே

கைகூடும் என வேதங்கள் மொழியுதே

---------

விளையாட இது நேரமா முருகா - என்

வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது                (விளையாட)

 

களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து

உளமார உனை நாடி உனை பாட வரும்போது          (விளையாட)

 

புரியாத புதிரோ நீ அறியாத கலையோ

பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ

விரிதோகை மயில் மீது வருவாய் என்ரெதிர் பார்த்து

வழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது                (விளையாட)

---------

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...