Sunday, December 28, 2025

குரு வந்தனம் - ஞான தேவனே ஞான போதனே - Gnana Devane Gnana Bothane

ஞான தேவனே ஞான போதனே
Gnana Devane Gnana Bothane
----------------

ஞான தேவனே ஞான போதனே
ஞான ரூபனே ஞானானந்தா
ஞான கீர்த்தியே ஞான மூர்த்தியே
ஞான ஜோதியே ஞானானந்தா (ஏழை)
 
ஏழை எந்தனை ஏற்க உன்மனம்
இரங்கவில்லையோ குருநாதா
பாலைவனமான எந்தன் வாழ்விலே
சோலை என வந்த குருநாதா (ஏழை)
 
எந்தன் விழியிலே எந்தன் மொழியிலே
எந்தன் வழியிலே நீ ஞானானந்தா
அந்த நிலவிலே இந்த வானிலே
இன்ப காற்றிலே நீ ஞானானந்தா
எந்தன் மனதிலே எந்தன் நினைவிலே 
எந்தன் உயிரிலே நீ ஞானானந்தா (ஏழை)
 
மனம் நினைக்கும் போது உன்னை துதிக்கும்
போது எந்தன் அருகில் வந்து நிற்கும் குருநாதா
நான் பாடும் போது என்னை பாடவைத்து
ஆனந்த நடனமிடும் குருநாதா
என்மனம் தளர்ந்த போது சோர்வடைந்த போது
அருள் சக்தியென வந்த குருநாதா
நான் பயந்த போது யாமிருக்க பயமேன்
என்று தெளியவைத்த எந்தன் குருநாதா (ஏழை)
 
நாமாவளி
ஞானானந்தா ஞானானந்தா
ஸத்குருநாதா ஞானானந்தா...

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...