தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பிரமபுரம்
-------------------
தோடுடைய செவியன்
விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட
லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல
ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர
மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே…
முற்றலாமையிள
நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல
னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை
யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர
மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
நீர்பரந்தநிமிர்
புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன
வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல
கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர
மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
மூன்றாம்-திருமுற
ஆனைக்கா – நீர்த்தீரள்நாதர் ; அம்பாள் - அகிலாண்டநாயகி
------------------
வானைக்காவில் வெண்மதி
மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித்
தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை
அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்
கேதும்ஏதம் இல்லையே 1
சேறுபட்ட தண்வயற்
சென்றுசென்று சேணுலா
வாறுபட்ட நுண்டுறை
யானைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார்
நிகரில்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார்
விண்ணிலெண்ண வல்லரே 2
தாரமாய மாதராள்
தானொர்பாக மாயினான்
ஈரமாய புன்சடை
யேற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை
யானைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார்
வல்வினைகள் மாயுமே
3
விண்ணினண்ணு புல்கிய
வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான்
சூலமேந்து கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினான்
ஆனைக்காவு கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க்
கேதமொன்றும் இல்லையே 4
வெய்யபாவங் கைவிட
வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ
மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க்
கொன்றைதுன்று சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூழ்
ஆனைக்காவு சேர்மினே
5
நாணுமோர்வு சார்வுமுன்
நகையுமுட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும்
பேசநின்ற பெற்றியான்
ஆணும்பெண்ணு மாகிய
ஆனைக்காவில் அண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக்
கறைகொள்மிடறன் அல்லனே 6
கூருமாலை நண்பகற்
கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும்
பேசநின்ற பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப்
பாயுங்கங்கை செஞ்சடை
ஆரநீரோ டேந்தினான்
ஆனைக்காவு சேர்மினே 7
பொன்னமல்கு தாமரைப்
போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை
ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை
பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல்
துன்னவல்லர் விண்ணையே 8
ஊனொடுண்டல் நன்றென
வூனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினாற்
பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான்
வாய்மையாக மன்னிநின்
றானொடஞ்சும் ஆடினான்
ஆனைக்காவு சேர்மினே 9
கையிலுண்ணுங் கையருங்
கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும்
வேதநெறியை யறிகிலார்
தையல்பாக மாயினான்
தழலதுருவத் தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ்
ஆனைக்காவு சேர்மினே 10
ஊழியூழி வையகத்
துயிர்கள்தோற்று வானொடும்
ஆழியானுங் காண்கிலா
ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன்
கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர்
வல்வினைகள் மாயுமே 11
வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்
லாம்அரன் நாமமே
சூழ்க வையக
முந்துயர் தீர்கவே.
1
அரிய காட்சிய
ராய்த்தம தங்கைசேர்
எரியர் ஏறுகந்
தேறுவர் கண்டமுங்
கரியர் காடுறை
வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி
வாரவர் பெற்றியே.
2
வெந்த சாம்பல்
விரையெனப் பூசியே
தந்தை யாரொடு
தாயிலர் தம்மையே
சிந்தி யாஎழு
வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவர்
எவ்வகை யார்கொலோ.
3
ஆட்பா லவர்க் கருளும்
வண்ணமும் ஆதிமாண்புங்
கேட்பான் புகில்அள
வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங்
குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்
றிவைகேட்க தக்கார்.
4
ஏதுக்க ளாலும் எடுத்த
மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்
டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர்
மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே
வந்து சார்மின்களே.
5
ஆடும் மெனவும் அருங்கூற்றம்
உதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது
பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும்
மெனக்கேட்டீ ராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது
நாட்ட லாமே.
6
கடிசேர்ந்த போது மலரான
கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங்
காட்டிடத்
தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட
முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார்
சொலக்கேட்டு மன்றே.
7
வேத முதல்வன் முதலாக
விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவர்
ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே
முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை யென்றே
கலிக்கோவை சொல்லே.
8
பாராழி வட்டம் பகையால்
நலிந்தாட்ட ஆடிப்
பேராழி யானதிடர் கண்டருள்
செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங்
கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும்
புகழுற்ற தன்றே.
9
மாலா யவனும் மறைவல்ல
நான் முகனும்
பாலாய தேவர்பக ரில்லமு
தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க்
கரிதா யெழுந்த
ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள்
செய்த தாமே.
10
அற்றன்றி அந்தண் மதுரைத்
தொகை யாக்கினானுந்
தெற்றென்று தெய்வந் தெளியார்
கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்
வினூரவும்
பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான்
பெருமானு மன்றே.
11
நல்லார்கள் சேர்புகலி
ஞானசம்
பந்தன் நல்ல
எல்லார் களும்பரவும்
ஈசனை
யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப்
பாசுரஞ்
சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும்
வல்ல ரன்றே.
12
No comments:
Post a Comment