Wednesday, November 19, 2025

சிவன் பாமாலை - அருட் சோதித் தெய்வமெனை - ARUTJOTHI DEIVAMENAI

அருட் சோதித் தெய்வமெனை - ARUTJOTHI DEIVAMENAI
------------------
இயற்றியவர் ராமலிங்க அடிகள்
ராகம் சாரங்க - கண்டஏகம்
------------------

அருட் சோதித் தெய்வமெனை

ஆண்டு கொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற

ஆனந்த தெய்வம்

பொருட்சாரும் மறைகளெல்லாம்

போற்றுகின்ற தெய்வம்

போதாந்த தெய்வமுயர்

நாதாந்த தெய்வம்


இருட் பாடு நீக்கியொளி

ஈந்தருளும் தெய்வம்

எண்ணிய நானெண்ணியவாறு

எமக்கருளும் தெய்வம்

தெருட் பாடலு வந்தெனையும்

சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற

தெய்வமதே தெய்வம்


தாயாகி தந்தையுமாய்த்

தாங்குகின்ற தெய்வம்

தன்னை நிகர் இல்லாததனித்

தலைமை தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர்

மனத்தமர்ந்ததெய்வம்

மலரடியென் சென்னிமிசை

வைத்த பெரும் தெய்வம்


காயாது கனியாகிக்

கலந்தினிக்கும் தெய்வம்

கருணை நிதித்தெய்வ

முற்றுங்காட்டுவிக்கும் தெய்வம்

சேயாக எனை வளர்க்கும்

தெய்வம் மகாதெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற

தெய்வமதே தெய்வம் ॥

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...