பாதமே துணை பரமசிவா - Pathame Thunai Paramasiva
----------------
ராகம் : வலஜி
இயற்றியவர் : ஸ்ரீ பாபநாசம்
சிவன்
----------------
பாதமே துணை பரமசிவா பயங்கர பவக்கடல் அமிழ்ந்துழல் எனக்குனது (பாதமே)
அனுபல்லவி
கீதமே முழங்கும் திருமயிலாபுரி உறையும் க்ருபாநிதி இறைவா கபாலி நின் (பாதமே)
சரணம்
வெற்பரையன் மகள் கற்பக நாயகி மின்னுமோர் பாகனே மாவிடை வாகனே
சிற்பரனே ஸனகாதி யோகியரும் தேவரும் போற்றும் தீனசரண்யனே (பாதமே)
No comments:
Post a Comment