Friday, August 22, 2025

சக்தி பாமாலை - யாதுமாகி நின்றாய் - Yaathumaagi Ninrai Kaali

யாதுமாகி நின்றாய் - Yaathumaagi  Ninrai Kaali

---------------- 

யாதுமாகி நின்றாய் - காளி!
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் - காளி!
தெய்வ லீலை யன்றோ!

பூதமைந்தும் ஆனாய் - காளி!
பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் - காளி!
பொறியை விஞ்சி நின்றாய்

யாதுமாகி நின்றாய் - காளி!


இன்பமாகி விட்டாய் - காளி!
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால் - காளி!
பிறிது நானும் உண்டோ?

யாதுமாகி நின்றாய் - காளி!


அன்பளித்து விட்டாய் - காளி!
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய் - காளி!
தொல்லை போக்கிவிட்டாய்

யாதுமாகி நின்றாய் - காளி!

 

எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் - காளி!
தெய்வ லீலை யன்றோ
தெய்வ லீலை யன்றோ

யாதுமாகி நின்றாய் - காளி!

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...