Saturday, August 30, 2025

தேசபக்தி பாமாலை - நீராரும் கடலுடுத்த - Neerarum Kadaludutha

 
நீராரும் கடலுடுத்த - Neerarum Kadaludutha
---------------------- 
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
----------------------
 
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும்
அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
 
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

---------------------
தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார் தமிழ் தாய் வாழ்த்து பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழரான திரு. “மனோன்மணியம்” சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. 1913-ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1914 ஆம் ஆண்டு முதல் தமிழ் சங்க கூட்டங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தாய் வாழ்த்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடல் என அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், “ஆரியம் போல தமிழ் உலக வழக்கழிந்து சிதையவில்லை” என்கிற ஆட்சேபகரமான வரி நீக்கப்பட்ட பிறகே அதிகாரபூர்வ பாடலாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...