Saturday, August 30, 2025

கணபதி பாமாலை - நம்பிக்கையோடு தொழுதால் - Nambikaiyodu Thozhuthaal

நம்பிக்கையோடு தொழுதால் - Nambikaiyodu Thozhuthaal
----------------------
நம்பிக்கையோடு தொழுதால் தும்பிக்கையான் வருவான்
துன்பமின்றி தருவான் துயர் தனை துடைப்பான்
இன்பமாய் வாழ்வினை இசைவாக தருவான் (நம்பிக்கையோடு)
 
நம்பிக்கை உண்டேல் நமக்கு இவ்வுலகெங்கும் இருப்பான்
தாய்க்கொரு மகனாக தன் தாய்வடிவே கேட்பதுபோல்
மாதினை பார்த்திருப்பான் மாதரும் கூடவில்லை
எல்லையெங்கும் தனிதிருப்பான் பிள்ளையென்று வருவோர்க்கு
இல்லையென்று சொல்லாமல் தும்பிக்கையான் காத்திடுவான் (நம்பிக்கையோடு)
 
அன்புடனே ஒருதேங்காய் கருத்தினிலே எடுத்துக்கொண்டு
ஐங்கரனை வலம்வந்து ஆனந்தமாய் தொழுதுவிட்டால்
திருபாதம் சமர்ப்பனித்தால் சர்வபிணி தீர்திடுவான்
ஆறாத நோய்களுக்கு தானாக மருந்தாவான் (நம்பிக்கையோடு)
 
சித்தியும் புத்தியுடன் உத்தமியின் புத்திரனாய்
தத்துவத்தின் மேலவனாய் சித்தமுடன் தொழுவோர்க்கு
அர்த்தமுடன் காத்திடுவான்
தும்பிக்கைநாதன் பேரை நம்பிக்கையுடன் நாம்
நாள்தோறும் பாடிவிட்டால் நலமெல்லாம் தந்திடுவான்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...