Thursday, July 31, 2025

நடராஜர் பாமாலை - நடனம் ஆடினார் – Nadanam Aadinaar

நடனம் ஆடினார் – Nadanam Aadinaar

-----------------

ராகம் : வசந்தா

இயற்றியவர் : ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதி

-----------------

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த

அநுபல்லவி

வடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்

தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில்   (நடனம்)

சொல்கட்டு ச்வரம்

தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ரி ரி சா சா

ரி தா னி ரி சா னி சா ரீ ரீ ரி ரீ ரி ரீ னி ரி

ரி னி ரி ரி சா ரி னி தா தா னி மா ரி

சரணம்

அஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்க அண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட

இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள் தந்தோமென்று    (நடனம்)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...